சென்னை மடிப்பாக்கம், ராஜராஜேஸ்வரி நகர் 6-வது தெருவில் அம்பேத்கர் சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடி சேதமடைந்துள்ளது. எனவே, சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், அதிக அளவு தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவம் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.