காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் வரதராஜபுரம் பஞ்சாயத்தில் உள்ள பாலாஜி நகரில் கடந்த ஒரு வாரமாக மழைநீர் குடியிருப்புகளின் அருகில் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உருவாகுதால் மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும். மேலும் துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.