நெல்லை மாவட்டம் முக்கூடல் ஆலங்குளம் ேராட்டில் உள்ள சிறுவர் பூங்காவில் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபரகணங்கள் சேதமடைந்து இருப்பதாகவும், பராமரிப்பு இன்றி புதர்கள் மண்டி கிடப்பதாகவும் முக்கூடலை சேர்ந்த திலகா 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக தற்போது பூங்காவில் விளையாட்டு உபரகரணங்கள் சரிசெய்யப்பட்டு, சீரமைத்து அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.