ஸ்ரீவைகுண்டம் தாலுகா செக்காரக்குடி ஊராட்சி ஏராளமான மக்கள் வசிக்கும் மிகப்பெரிய ஊராட்சி ஆகும். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் குரூப்-4 தேர்வு எழுத வந்தவர்கள், தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பொட்டலூரணி விலக்கு அருகில் வந்தபோது, அங்கு வழிகாட்டி பலகை இல்லாததால் செக்காரக்கடிக்கு எவ்வாறு செல்வது என்று குழப்பம் அடைந்தனர். இதுபோன்ற சிரமம் ஏற்படாத வகையில், பொட்டலூரணி விலக்கில் செக்காரக்குடி செல்லும் வழி என்று பெயர் பலகை வைத்தால் பொதுமக்கள் பயன் அடைவர்.