அபாயகரமான பள்ளம்

Update: 2023-09-03 18:13 GMT
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்டுரோடு ரயில்வே கேட் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சாலை ஆங்காங்கே பெயர்ந்து பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால், பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்