தர்மபுரி மாவட்டம் பூதநத்தம் ஊராட்சியில் பூதநத்தம் காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 50 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது இந்த தொகுப்பு வீடுகள் சேதமடைந்து உள்ளன. மேற்கூரையில் மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால் தார் பாய் போட்டு மூடி உள்ளனர். எனவே இந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சந்தோஷ், பூதநத்தம், தர்மபுரி.