பெங்களூரு விதான சவுதாவில் இருந்து சி.ஐ.டி. அலுவலகம் செல்லும் சாலையில் சந்திப்பு ஒன்று உள்ளது. அந்த சந்திப்பு அருகே உள்ள நடைபாதையில் மரக்கிளைகள் போடப்பட்டுள்ளது. தற்போது அந்த கிளைகள் காய்ந்து கிடக்கிறது. இதனால் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. அவர்கள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை அகற்ற வேண்டும்.