நெகமம் அருகே கள்ளிப்பட்டி பிரிவில் இருந்த பயணிகள் நிழற்குடையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டனர். இடித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி நிழற்குடை அமைக்க உயர் அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.