கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள கவுண்டன்புதூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் போதிய அளவில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் தற்போது இந்த பள்ளி கட்டிடங்கள் பூட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மாணவர்கள் வெளியூர் சென்று படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த பள்ளி கட்டிடத்தை திறந்து மாணவர்களின் சேர்க்கையை கூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.