தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ரெயில் நிலையம் செல்லும் சாலை மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. கடந்த சில நாட்களாக மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை சாலை ஓரமே வீசி செல்கின்றனர். அதனால் ரெயிலுக்கு செல்லும் பயணிகள் இந்த சாலையை கடக்க சிரமப்பட்டு செல்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பெண்கள் இந்த பகுதியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவிசங்கர், மாரண்டஅள்ளி, தர்மபுரி