திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் பொது மக்களின் குறைகளை கேட்டறியும் விதமாக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த காவல் உதவி மையத்தில் போலீசார் இன்றி வெறிச்சோடி பயன்பாடற்றுக் கிடக்கிறது. புகார் மற்றும் தகவல் கேட்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி காவல்துறை உயர் அதிகாரிகள் காவல் உதவி மையத்தில் நிரந்தரமாக போலீசார் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?