சென்னை சூளைமேடு, பெரியார்பாளையம் மெயின்ரோடு பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் பொது மக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.