ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வண்ணாங்குன்டு பகுதியில் பெரிய குளம் அமைந்துள்ளது. இந்த குளம் அப்பகுதி பொதுமக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த குளத்தின் படிக்கட்டுகள் சேதமடைந்து உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே படிக்கட்டுகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.