பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்தாமல், சாலையில் இறங்கி நடந்து செல்கிறார்கள். அப்போது அவர்கள் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் உள்ள குப்பை கழிவுகளை விரைவில் அகற்ற வேண்டும்.