திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தண்டலைப்புத்தூர் கிராமத்தில் வடிகால் வசதி இல்லாமல் மழைநீர் தெருவில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக யாரும் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. என சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.