கல்வராயன்மலையில் உள்ள கரியலூரில் கோடை விழா அரங்கம் உள்ளது. இந்த அரங்கத்தில் சமூக விரோதிகள் புகுந்து மது குடிப்பதும், பணம் வைத்து சூதாடுவது உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது கோடை விழா அரங்கம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இதை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.