தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே வெள்ளமடம் பஞ்சாயத்து முத்துநகரில் திறந்த நிலையில் உள்ள ஆபத்தான ஆழ்துளை கிணற்றை மூட வேண்டும் என்று மணிராஜ் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.