தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ராமச்சந்திரபட்டினம்- மேல மெஞ்ஞானபுரம் இடையே சாலை விரிவாக்கம் செய்தபோது மின்கம்பங்களை இடமாற்றம் செய்யாததால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக ஸ்டாலின் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின்கம்பங்களை சாலையோரமாக இடமாற்றி அமைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.