புதிய சுகாதார வளாகம் கட்டப்படுமா?

Update: 2023-08-30 11:27 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது சுகாதார வளாகம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் இதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்துவது இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சிதிலமடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்