பூட்டப்பட்ட ஆயத்த ஆடை கட்டிடம்

Update: 2023-08-30 11:26 GMT

தவுட்டுப்பாளையத்தில் இருந்து கட்டிப்பாளையம் செல்லும் சாலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சித்துறை சார்பில் ஆயத்த ஆடை தயாரிக்கும் கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக கட்டிடத்தின் மேல்தள கான்கிரீட் சிதிலமடைந்து வருகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் கட்டிடத்தின் மேற்பகுதியில் இருந்து மழைநீர் கட்டிடத்தின் உள்ளே வருகிறது. இதனால் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிலை நிறுத்தி விட்டதன் காரணமாக அந்த ஆயத்த ஆடை தயாரிக்கும் அரசு கட்டிடத்தை பூட்டி விட்டனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி