சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-08-30 09:27 GMT
பிரம்மதேசம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதம் அடைந்து ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் உடைந்து கீழே விழுந்து வருகின்றன. இதனால் தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதை தவிர்க்க இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியே அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்