பாலத்தில் விரிசல் விழும் அபாயம்
கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் பகுதியில் பழைய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் வெளிப்பகுதியில் அரசமரம் பல இடங்களில் வளர்கிறது. இதனால் பாலத்தில் விரிசல் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் வளரும் அரச மரங்களை வேரோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.