விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் உள்ள ஏரி தூர்வாரப்படாமல் உள்ளதால், கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளது. எனவே ஏரியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.