அகற்ற வேண்டிய டாஸ்மாக் கடை

Update: 2023-08-27 16:30 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக பாப்பிரெட்டிப்பட்டியை நாடி வரவேண்டும். இங்குள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த டாஸ்மாக் கடை பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளதால் மது அருந்துவோர் பள்ளி மாணவர்கள் அவ்வழியே செல்லும்போது தொந்தரவு கொடுக்கின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜாமணி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்