பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 9-வது கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடைபாதையில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரிகள், டிராக்டர்கள் ஆகியவை நிறுத்தப்படுகின்றன. இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நடைபாதையில் லாரிகள் நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும்.