வேகத்தடை தேவை

Update: 2023-08-27 12:19 GMT

நெல்லை- பாபநாசம் இடையே சாலை விரிவாக்க பணிக்காக, சேரன்மாதேவி அருகே கூனியூர் பஸ் நிறுத்தம் அருகில் இருந்த வேகத்தடைகளை அகற்றினர். தொடர்ந்து அங்கு புதிய சாலை அமைத்த பின்னர் வேகத்தடைகளை மீண்டு்ம் அமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்