தூர்வாரப்படாத குளங்கள்

Update: 2023-08-27 11:42 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கருப்பட்டாங்குறிச்சி கிராமத்தில் பட்டவர் கோவில் குளம் மற்றும் ஆண்டி குளம் என 2 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் தூர்வரப்படாமல் தற்போது கருவேல மரங்கள் அதிக அளவில் முளைத்து காணப்படுவதினால் மழை பெய்யும் போது, இந்த குளங்களில் மழைநீரை சேகரிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்