நடவடிக்கை தேவை

Update: 2023-08-27 08:31 GMT

 குலசேகரபுரம் ஊராட்சியில் பொதுமக்கள் குடிநீர் வசதிக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக அந்த கிணற்றின் மேல் பகுதியில் இரும்பாலான மூடியும் அமைக்கப்படுள்ளது. தற்போது இந்த மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், மரத்தின் காய்ந்த இலைகள், குப்பைகள் கிணற்றுக்குள் விழுந்து தண்ணீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி கிணற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சேதமடைந்து மூடியை அகற்றி விட்டு புதிய மூடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்