விக்கிரவாண்டி தாலுகா சூரப்பட்டு, அரும்புலி, சிறுவலை, எழுச்செம்பொன், வெள்ளேரிப்பட்டு, அன்னியூர், பனமலை, பனமலைப்பேட்டை, அனந்தபுரம் போன்ற ஊர்களில் உள்ள பஸ்நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். எனவே மேற்கண்ட பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.