எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதனால் அந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் அருகே குடியிருப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் கம்பிகளை வைத்துள்ளனர். எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு உடனடியாக அந்த கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சாமியப்பா, எருமப்பட்டி.