ஆபத்தான நடைமேம்பாலம்

Update: 2023-08-23 16:41 GMT
பெங்களூரு கெங்கேரி பகுதியில் பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பகுதியை இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைமேம்பாலத்தில் முதியவர்கள், ஊனமுற்றோரின் வசதிக்காக ‘லிப்ட்’ அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், லிப்ட் அமைய உள்ள பகுதி திறந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக, பாதசாரிகள் கவனிக்காமல் தவறி விழ வாய்ப்பு இருக்கிறது. இதனால், லிப்ட் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அல்லது திறந்த நிலையில் இருக்கும் பகுதியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்