பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-07-25 12:08 GMT

அந்தியூரில் இருந்து நகலூர் வழியாக அத்தாணி, காேபிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. காலை 7.10 முதல் இரவு 7மணி வரை 5 முறை இயக்கப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு பாேடப்பட்டது. அதன் பிறகு பஸ் இயக்கப்பபடவில்லை. இதனால் பள்ளிக்கூடம். கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அனைவாின் நலன் கருதி நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்