ஏரியூரில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளும், 200-க்கும் மேற்பட்ட வர்த்தக கடைகளும் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக ஏரியூர் வந்து செல்கின்றனர். பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஏரியூர் கடைவீதி மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் பள்ளி கல்லூரி மாணவிகளும், பெண்களும் கழிவறை வசதியின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், ஏரியூர்.