சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டி- பொன்னமராவதி வரை செல்லும் நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றது. இந்த நிலையில் சிலர் சாலையை ஆக்கிரமித்து வருகின்றனர். தங்களுடைய வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.