திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி மடவிளாகம் 11-வது வார்டில் உள்ள ரேஷன் கடை கால நேர அட்டவணை எழுதபடவில்லை. இதனால் ரேஷன் கடை விற்பனையாளர் அவருடைய விருப்பபடி திறப்பதும், மூடுவதுமாக செயல்படுத்துகிறார்கள். இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பொருட்கள் சரியான முறையில் கிடைப்பதில்லை. எனவே, சரியாண நேரத்தில் ரேஷன் கடையை திறக்கவும், காலநேர விபரத்தை பெயர் பலகையில் எழுதிடவும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.