சென்னை ராமாபுரம், சாந்தி நகர் மெயின் ரோடு குண்டும் குழியுமாக மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் சிறிது மழை பெய்தாலும் மழைநீர் சாலையில் இருந்து வெளியேறாமல் ஆறுபோல் தேங்கிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை விரைந்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.