தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட மணிக்கட்டிப்பொட்டல் அரசமரம் சந்திப்பில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளிக்கு திரும்பும் பகுதியில் வடக்குபுறம் சாலையின் நடுவே ஓடையின் மீது சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அடிப்பகுதி சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் பாலம் இடிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த பாலத்தை அகற்றி விட்டு விரிவுபடுத்தி புதிய பாலத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.