திட்டக்குடி தாலுகா பூவனூர் ஊராட்சி ஒ.கீரனூர் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் பாழடைந்து காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து பூதர்மண்டி காணப்படுகிறது. இதனால் சிகிச்சைக்காக அப்பகுதி பொதுமக்கள் வெகுதூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே துணை சுகாதார நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.