நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் பக்தர்கள் வேளாங்கண்ணி கடற்கரையில் குளித்து செல்கின்றனர். இந்த நிலையில் கடற்கரையில் குளிப்பதற்கு முறையான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாததால் பக்தர்கள் சிலர் கடல் அலையால் இழுத்து செல்லப்பட்டு உயிர் இழக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க பக்தர்கள் கடலில் குளிக்க முறையான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?