பெங்களூரு டபுள் ரோடு செயின்ட் ஜான்ஸ் கல்லூரி அருகே சாலையோரம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை ஏராளமான பாதசாரிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த நடைபாதையின் சிலாப்புகள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், அந்த நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.