புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து நம்பியூர் செல்லும் வழியில் உள்ள மின்மயானம் அருகே காங்கரை பள்ளம் என்ற இடத்தில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. மிகவும் குறுகிய வளைவு கொண்ட இந்த பாலத்தில் இரவில் ஒளிரும் ரிப்ளைக்டர்கள் பொருத்தப்படவில்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.