பெங்களூரு பசவேஸ்வராநகர் கமலாநகர் மார்க்கெட்டில் சாலையோரம் பாதசாரிகளின் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த நடைபாதையை சில கடைக்காரர்கள் ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாைதயை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.