தெங்கம்புதூர் அருகே காமச்சன்பரப்பு ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள கால்வாயை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக சிலர் பிளாஸ்டிக் கழிவுகள், இறந்த விலங்குகளின் உடல்களையும் வீசிச் செல்கின்றனர். இதனால், கால்வாயில் பாயும் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த தண்ணீரை பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி கால்வாயில் கொட்டப்படுள்ள கழிவுகளை அகற்றுவதுடன், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், காமச்சன்பரப்பு.