விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் 2 பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. ஆனால் இந்த 2 பஸ் நிறுத்தங்களிலும் நிழற்குடை இல்லாததால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?