பெங்களூரு மல்லேசுவரம் சாங்கி ரோட்டில் வின்ட்சர் மேனர் பாலத்தின் சுரங்கபாதையில் ஒரு நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையில் இரும்பு ராட்சத கம்பி ஒரு ஆண்டுக்கும் மேலாக கிடக்கிறது. எப்போதும் பரபரப்பாக வாகன போக்குவரத்து நடைபெறும் சாலையில், நடைபாதையை இரும்பு கம்பி ஆக்கிரமித்து இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே விபரீதம் நடக்கும் முன் நடைபாதையில் கிடக்கும் இரும்பு கம்பியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?