நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் எதிரில் பஸ் நிறுத்தும் இடம் உள்ளது. கடலூர்-பண்ருட்டி மார்க்கத்தில் இயக்கப்படும் பஸ்கள், இந்த பஸ் நிறுத்தும் இடத்தில் நின்று செல்கின்றன. ஆனால் பயணிகள் பஸ்சுக்காக சுட்டெரிக்கும் வெயிலிலும், மழையிலும் சாலையிலேயே நிற்கிறார்கள். பஸ் நிறுத்தும் இடத்தில் நிழற்குடை அமைக்காததால் ஒதுங்க இடமின்றி பயணிகள் தவிக்கிறார்கள். பயணிகளின் நலன் கருதி நிழற்குடை அமைக்கப்படுமா?.