கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தில் விரிசல்

Update: 2023-08-16 13:52 GMT

நாங்குநேரி யூனியன் முனைஞ்சிப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த கட்டிடத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும், கான்கிரீட் சிலாப்புகள், சுவர்களில் விரிசல்கள் விழுந்த நிலையிலும் உள்ளது. இதனால் பொதுமக்கள், ஊழியர்கள் அச்சத்துடனே கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர். எனவே ஆபத்தான கட்டிடத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்