திருவள்ளூர், அரசு ஆஸ்பத்திரி முன்பு இருந்த பயணிகள் நிழற்குடை புதிய ஆஸ்பத்திரி கட்டுவதற்காக இடிக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் புதிய பஸ் நிழற்குடை அமைத்து தரப்படவில்லை. தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர். நிழற்குடை இல்லாததால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன்கருதி புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.