பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வடக்கலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை, குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.