நாமக்கல் மாவட்டம் கொண்டிசெட்டிப்பட்டி ஊராட்சியில் ஆசிரியர் குடியிருப்பு மற்றும் குறிஞ்சி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் இங்கு கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும்.
-பிரேம், நாமக்கல்.